அணு ஆயுத ஒழிப்பு, எதிர்ப்புத்தன்மை குறைவதைப் பொறுத்து அமையும் –  வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்.

அமெரிக்காவும், வடகொரியாவும் தங்களுக்கிடையேயான எதிர்ப்புத் தன்மைகளைக் குறைத்துக் கொள்வதைப் பொறுத்து, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பு அமையும் என, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். கொரிய தீபகற்பத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட, அமெரிக்காவும், வடகொரியாவும் தங்களுக்கிடையேயான சரியான புரிதலுடன், எதிர்ப்புத்தன்மையைப் போக்க உறுதி பூண வேண்டும் என்றார் அவர். அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ, இருநாட்டுத் தலைவர்களின் வரலாறு படைக்கும் சந்திப்பு, இருநாடுகளின் உறவில் பெருத்த மாற்றத்தை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் தங்கள் நாடுகளுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துக் கொண்டனர். இதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். அந்தப் பயணங்கள் இருநாட்டு உறவுகளை மேலும் வலுவடையச் செய்யும் என்று அவர்கள் கூறினர்.

Pin It