அதிமுக வின் இரு அணிகளும் இணையும் முயற்சி தொடர்கிறது.         

 

தமிழ்நாட்டில், அனைத்திந்திய அண்ணா திமுகவின் எதிரணியான ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியுடன் இணைவது குறித்துப்  பேச்சு நடத்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான பிரிவு, குழு ஒன்றை அமைத்துள்ளது.  சென்னையில் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் சி.வி. ஷண்முகம் மற்றும் ஆளும் பிரிவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், பன்னீர் செல்வம் பிரிவுடன் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைகள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.  தாய் கட்சியின் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் என்றும் இரண்டு பிரிவுகளும் இணைவதன் மூலம் அரசின் நிலைத்தன்மை உறுதியாகும் என்றும் அவர்கள் நம்பிக்கை  தெரிவித்தனர்.

Pin It