அனுமதி ஆணையின் நகல் – திரு ப சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு வழங்குமாறு வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கருப்புப் பண சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு நடவடிக்கை தொடங்குவதற்கான அனுமதி ஆணையின் நகல்களை நாளைக்குள் முன்னாள் மத்திய அமைச்சர் திரு ப சிதம்பரத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குமாறு வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்கள் இந்தக் குற்றச்சாட்டு நடவடிக்கையை நிறுத்தி வைப்பதற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். புகார் கடிதத்தின் நகலை வழங்க வேண்டும் என்று வருமானவரித்துறைக்கு உத்தரவிடவேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

Pin It