அனைத்து அரசு சாரா அமைப்புக்களும் வெளி நாட்டு நிதியுதவி தொடர்பான வங்கிக் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும் – உள்துறை அமைச்சகம்.

நாட்டில் உள்ள 1200-க்கும் மேற்பட்ட அரசுசாரா அமைப்புகள் தாங்கள் பெறும் வெளிநாட்டு நிதியுதவி தொடர்பான வங்கிக் கணக்குகளைச் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  இந்த அமைப்புகளில் பல வெளிநாட்டு உதவியைப் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அங்கீகாரம் பெறவில்லை என்றும் இதனால் வெளிநாட்டு உதவி கட்டுப்பாட்டுச் சட்டத்தை அமல்படுத்துவதில் வங்கிகளுக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து அரசுசாரா அமைப்புகளும் நிர்ணயிக்கப்பட்ட ஒரே வங்கிக் கணக்கில் வெளிநாட்டு உதவிகளைப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அது கூறுகிறது.                இதனை மீறுவோருக்கு எதிராகச் சட்டத்தின்படி தண்டனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Pin It