அபுதாபியில் நீதிமன்றங்களில் 3 ஆவது ஆட்சிமொழியாக இந்தி  அங்கீகாரம்.

அபுதாபியில் நீதிமன்றங்களில் அராபிய மொழி மற்றும் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இந்தி 3 ஆவது ஆட்சிமொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அபுதாபி நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி வரும் காலங்களில் இந்தி மொழியிலும் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் 33 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களின் பெரும்பாலோனோர் தொழிலாளர்கள் என்பதால் அவர்களுக்கு இந்தி ஆட்சி மொழியாக்கப்பட்டது பயனளிக்கும் என்று அபுதாபி நீதித்துறை தெரிவித்துள்ளது.

 

Pin It