அபுதாபியில்  29  ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் 24ஆம் தேதி தொடக்கம் – இந்தியாவிற்கு சிறப்பு விருந்தினர் அந்தஸ்து.

ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில்  29  ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. முப்பதாம் தேதிவரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில்,  சிறப்பு விருந்தினர் அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஐம்பது நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் புத்தகங்களைக் காட்சிப்படுத்துகின்றனர். ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pin It