அமர்நாத் யாத்திரிகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி 16 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

ரம்பன் மாவட்டத்திற்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்த விபத்து நேரிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து வேதனை அடந்துள்ளதாகக் கூறியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் கருணைத் தொகையையும், காயமடைந்தவர்களுக்கு  50 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித் தொகையையும் பிரதமர் அறிவித்தார்

Pin It