அமெரிக்காவின் முன்னாள் அதிபர்  ஜார்ஜ் எச் டயிள்யூ புஷ் இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ்  எச் டபிள்யூ புஷ் இறுதிச் சடங்கிற்கென உலகத்தலைவர்கள் பலர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

94 வயதான புஷ், ஹுஸ்டன் நகரில் அவரது இல்லத்தில் காலமானார். அதிபர் மாளிகைக்கு 3 மைல் தொலைவில் உள்ள வாஷிங்டன் தேசிய கத்தீட்ரல் கல்லறையில் அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

அமெரிக்காவின் 41ஆவது அதிபரான புஷ்ஷின் மறைவுக்கென இன்று தேசிய துக்க தினமாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், ஜெர்மனி சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்க்கல், ஜோர்டான் மன்னர் அப்துல்லா இரண்டு மற்றும் மகாராணி ராணியா, போலந்தின் முன்னாள் அதிபர் லெக் வலேசா ஆகியோர் புஷ்ஷின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளனர்.

Pin It