அமெரிக்காவில் கலிஃபோர்னியாவிலுள்ள இரவுநேர விடுதியில் துப்பாக்கிச் சூடு – 13 பேர் பலி.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இரவுநேர விடுதியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். லாஸ்ஏஞ்சல்ஸிற்கு வடகிழக்கில் அமைந்துள்ள இந்த விடுதியில், நேற்று  சம்பவம் நடந்த சமயத்தில் சுமார் 200 பேர் இருந்ததாகவும், அப்போது அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் இந்த உயிரிழப்பு நேரிட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய நபரும், விடுதிக்குள் உயிரிழந்து கிடந்ததாகவும், அந்த நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Pin It