அமெரிக்கா தடைசெய்யப்பட்ட ஏவுகணை தயாரிக்கத் தொடங்கினால், ரஷ்யாவும் அதே போன்ற நடவடிக்கை எடுக்கும் – புதின் எச்சரிக்கை

முக்கியமான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி அமெரிக்கா தடை செய்யப்பட்ட ஏவுகணை தயாரிக்கத் தொடங்கினால் ரஷ்யாவும் அதே போன்ற நடவடிக்கையை எடுக்கும் என்று அந்நாட்டு அதிபர் விளாடிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகப்போர் காலத்திய இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு அமெரிக்கா பல்வேறு காரணங்களைக் கூறி வருவதாக அதிபர் புதின் குற்றம் சாட்டினார்.

புவி நிலைமை பெரிதும் மாறிவிட்டதாகவும், இத்தகைய அணு ஆயுதங்களைத் தாம் பெற்றிருக்க வேண்டும் என அமெரிக்கா நம்புவதாகத் தோன்றுகிறது என்று புதின் மேலும் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திரு மைக் பாம்பியோ, நேட்டோ நிகழ்ச்சி ஒன்றில் இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா ஏமாற்றி வருவதாகக் கூறி இன்னும் 60 நாட்களில் நடுத்தரத் தொலைவு அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடமைப் பொறுப்புக்களை நிறுத்தி விடப்போவதாக அறிவித்ததை அடுத்து அதிபர் புதின் இதனைத் தெரிவித்துள்ளார்.

Pin It