அல் அஸீஜியா எஃகு ஆலை வழக்கு – திரு நவாஸ் ஷெரீஃப்பின் மனு மீதான விசாரணை வரும் 21 ஆம் தேதி நடைபெறும்.

அல் அஸீஜியா எஃகு ஆலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் திரு நவாஸ் ஷெரீஃப் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. அல் அஸீஜியா எஃகு ஆலை ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 25 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் திரு நவாஸ் ஷெரீஃப் மனுதாக்கல் செய்துள்ளதுடன், தண்டனையை நிறுத்தி  வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்  கொண்டுள்ளார்.

Pin It