அஸ்ஸாமிலுள்ள தோலா சாடியா அணை, நாட்டிற்கு பிதமர் அர்ப்பணிப்பு.

இம்மாதம் 26ஆம் தேதி, அஸ்ஸாமிலுள்ள தோலா சாடியா அணையை, நாட்டிற்கு பிதமர் அர்ப்பணிப்பார். 9.16 கி.மீ. நீளம் கொண்ட இந்த அணை நாட்டிலேயே அதிக நீளமான அணையாகும் என்று, அஸ்ஸாம் பொதுப்பணித்துறை அமைச்சர், பரிமல் சுக்லா பைத்யா தெரிவித்தார். அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மக்களுக்கு இணைப்பு உண்டாக்கும் இந்த அணை, ரூ.1,200 கோடியில் கட்டப்பட்டுள்ளது என்றார் அவர். இந்த அணையின் துவக்க விழாவிற்கான ஏற்பாடுகளை அஸ்ஸாம் முதலமைச்சர் திரு. சர்பானந்த் சோனோவால் ஆய்வு செய்தார். மக்களை இணைக்கும் பாலமாக மட்டுமின்றி, பாதுகாப்பு முக்கியத்துவமும் பெற்றது இந்த அணை என, நமது நிருபர் தெரிவிக்கின்றார்.

Pin It