அஸ்ஸாம் மழை வெள்ளத்தில் 1,700 கிராமங்கள் பாதிப்பு.

அஸ்ஸாமில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்திற்கு 19 மாவட்டங்களில் உள்ள 1,700 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது. டின்சுக்கியா மற்றும் திப்ருகர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 137 நிவாரண முகாம்களில் 63,000 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். தேமாஜி, கோக்ரஜார், மஜூலி, துப்ரி ஆகிய மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர்.

Pin It