ஆப்கானிஸ்தானின் கிழக்கு லெக்மான் மாகாணத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஏழு குழந்தைகள் பலி.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு லெக்மான் மாகாணத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஏழு குழந்தைகள் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். அந்தப் பகுதியில் கிடந்த பீரங்கிக் குண்டு ஒன்று வெடித்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைவரும் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.

Pin It