ஆப்கானிஸ்தானில் அமைதியான, நிலையான வளர்ச்சிக்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உதவும் – மத்திய அரசு.

ஆப்கானிஸ்தானில் அமைதியான, நிலையான வளர்ச்சி ஏற்படுவதற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் உதவிகள் வழங்கப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமா,ர் ரஷ்யா இதற்காக மாஸ்கோவில் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் குறித்து இந்தியா அறிந்துள்ளதாகக் கூறினார். இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா உரிய உதவிகள் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

Pin It