ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஜலாலாபாத் நகரில் உள்ள கல்வித்துறை வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் மேலும் பத்துபேருக்குக் காயம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் குறைந்தது இரண்டு பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்டிருந்தனர் என்றும் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Pin It