ஆப்கானிஸ்தான்: குண்டுவெடிப்பில்  12 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் நேரிட்ட குண்டுவெடிப்பில்  12 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.  தக்கர் மாகாணத்தில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது  குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தக்கர் மாகாண ஆளுநர்  திரு முகமது ஜவாத், நாடாளுமன்ற வேட்பாளர் திரு  நஜிஃபா உஸிஃபிபெக் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்தார்.

Pin It