ஆப்கானிஸ்தான் குறித்து ரஷ்யா நடத்தும் மாநாட்டில் பங்கேற்பது குறித்த முடிவை இந்தியா எடுக்கும் – வெளியுறவுத்துறை அமைச்சகம்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தி, பன்முகத் தன்மைகொண்ட  பாதுகாப்பான, நிலையான, வளமான அரசு ஒன்று அமைவதற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்ற அடிப்படையில், ஆப்கானிஸ்தான் குறித்து ரஷ்யா நடத்தும் மாநாட்டில் பங்கேற்பது குறித்த முடிவை இந்தியா எடுக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆப்கானிஸ்தானர்களால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு அரசு உருவாகவேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்து தனது கொள்கையாகக் கொண்டிருக்கிறது என்று நேற்று புதுதில்லியில் அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அதிகாரமற்ற முறையில் இந்தக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Pin It