ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கியின் வருடாந்திரக் கூட்டம் – மே மாதம் 23ஆம் தேதி, பிரதமர் துவக்கம்.

ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கியின் வருடாந்திரக் கூட்டத்தை, மே மாதம் 23ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைக்கிறார். வரலாற்றிலேயே முதன்முறையாக, ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கியின் வருடாந்திரக் கூட்டத்திற்கு இந்தியா விருந்தோம்பும் நாடாக விளங்குவதாக, பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் திரு. ஷக்திகாந்தா தாஸ் தெரிவித்தார். குஜராத்திலுள்ள காந்தி நகரில், மே மாதம் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். உலகெங்கிலுமிருந்து, 81 நாடுகளைச் சேர்ந்த 3000 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வர் எனவும் அவர் தெரிவித்தார். ஆப்பிரிக்க நாடுகளின் மேம்பாட்டில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், அனைவரையும் உள்ளடக்கிய ஸ்திரமான வளர்ச்சி குறித்தும் வங்கியின் தலைமை அதிகாரிகள் விவாதிப்பர் என்று அவர் கூறினார்.

Pin It