ஆஸ்திரேலிய –  இந்திய பிரதமர்கள் இருதரப்புப் பேச்சுவார்த்தை

ஆஸ்திரேலியப் பிரதமர் திரு மால்கம் டர்ன்புல்லுடன் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோதி இன்று காலை இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தக் குறுகிய காலச் சந்திப்பில், இரு தரப்பும் பரஸ்பர நலன்கள் குறித்தும் இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்தன. மேலும் பல துறைகளில் கூட்டுறவுக்கான சாத்தியக் கூறுகள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

வியட்நாம் பிரதமர் குயென் ஸுவான் புக் அவர்களுடனும் பாரதப் பிரதமர் பேச்சுக்கள் நடத்தினார். ஜப்பான் மற்றும் நியூசிலாந்து பிரதமர்களுடனும் ப்ருனெய் சுல்தானுடனும் கூட இருதரப்பு பேச்சு வார்த்தைகள் நடத்தவுள்ளார்.  மனிலாவில் 12 ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டிலும் 15 ஆவது இந்திய – ஆசியான்  உச்சி மாநாட்டிலும் இன்று திரு மோதி பங்கேற்கவுள்ளார்.

Pin It