இங்கிலாந்தில் நீதித்துறை அமைச்சர் திரு பிலிப் லீ  ராஜினாமா.

இங்கிலாந்தில் நீதித்துறை அமைச்சர் திரு பிலிப் லீ தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரெக்ஸிட் நடவடிக்கையை இங்கிலாந்து அரசு கையாண்ட விதத்தில் அதிர்ச்சி அடைந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிக் கொள்ளும் மசோதா, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் தெரசா மே-க்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. பிரெக்ஸிட் விவகாரத்தில் நாடாளுமன்றத்திற்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பது பற்றி பிரதமர் மே தனது சொந்த கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில், திரு லீயின் பதவி விலகல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pin It