இத்தாலியப் பிரதமர் அக்டோபர் 30 இல் இந்தியா வருகை.

இம்மாதம் 30 ஆம் தேதி, இத்தாலியப் பிரதமர் பேராசிரியர் கிஸெப் காண்டே அவர்கள் இந்தியா வரவிருக்கிறார். பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் இந்தியா வரும் அவர், இந்திய அறிவியல் துறை, தொழில் கூட்டமைப்பு மற்றும் இத்தாலி தொழில்நுட்ப உச்சி மாநாடு 2018 இல் கலந்து கொள்கிறார். அவரது இந்த முதல் இந்தியப் பயணத்தின்போது, இம்மாதம் 30 ஆம் தேதி அவர் பிரதமர் திரு நரேந்திர மோதியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்துவார். உச்சி மாநாட்டில், தூய்மை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரியாற்றல், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், விண்வெளி ஆராய்ச்சி, கல்வி மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். இருநாடுகளுக்குமிடையே, ராஜீய உறவுகள் தொடங்கி, 70 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாடும் விதமாக, இத்தாலியப் பிரதமரின் பயணம் அமைகிறது.

 

Pin It