இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களை இழைத்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தப்பி விடலாம் என்ற நிலை முற்றிலுமாக மாறி வருகிறது – பிரதமர் திரு நரேந்திர மோதி.

இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்களை இழைத்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தப்பி விடலாம் என்ற நிலை முற்றிலுமாக மாறி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். புதுதில்லியில்  நேற்று ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர், தற்போதைய நிகழ்வுகள், பொருளாதாரக் குற்றவாளிகள் எந்த ஒரு நாட்டிலும் தஞ்சமடைய முடியாது என்பதையே உணர்த்துவதாகக் குறிப்பிட்டார்.

வெளியுறவுத்துறை மூலம் தொடர்புகொண்டு, வெளிநாடுகளில் தங்கியுள்ள பொருளாதாரக் குற்றவாளிகளை இந்தியா கொண்டு வந்து அவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அர்ஜெண்டினாவில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில், பொருளாதாரக் குற்றவாளிகள் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக வலியுறுத்தப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். வங்கி மோசடியில் தொடர்புடைய விஜய் மல்லைய்யா, நிரவ்மோடி, மெஹுல் சோக்சி உள்ளிட்டோரை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திரு நரேந்திர மோதி கூறினார்.

Pin It