இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே இரு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமையும் – அமெரிக்கா நம்பிக்கை.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் அடுத்த வாரம் புதுதில்லியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமையும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி திரு ரேண்டல் ஜி ஸ்கிரீவர் வாஷிங்டனில் பேசுகையில், பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் இந்தப் பேச்சுவார்தையில் இடம் பெறும் என்றார். பாதுகாப்புத்துறையில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திரு மைக் பாம்பியோவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ஜிம் மேட்டிசும் அடுத்த வாரம் இந்தியா வருகின்றனர். அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ்  மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுடன் பேச்சு நடத்த உள்ளனர்.

 

Pin It