இந்தியாவுக்கு எதிரான 2  ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இங்கிலாந்து வெற்றி..

இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ், 159 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்காவது நாளான நேற்று, இங்கிலாந்து அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன் எடுத்திருந்த நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, 130 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

முன்னதாக, முதல் இன்னிங்சில் 107 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி, இப்போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி,  2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 18 ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

Pin It