இந்தியாவை, வைர வர்த்தகத்துக்கான ஒரு சர்வதேச மையமாக உருவாக்க  அரசு கவனம் – பிரதமர் நரேந்திர மோதி.

இந்தியாவை, வைர வர்த்தகத்துக்கான ஒரு சர்வதேச மையமாக உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். மும்பையில் நடைபெறும் வைர வர்த்தகம் பற்றிய சர்வதேச மாநாட்டில் நேற்று காணொலிக் காட்சி மூலமாக உரையாற்றிய பிரதமர், மேக் இன் இண்டியா, ஸ்கில் இண்டியா ஆகிய உருமாற்றத்துக்கான முயற்சிகளின் கீழ் வைர மற்றும் ஆபரணத் துறையின் ஆற்றலை அதிகரிக்க அரசு முயன்று வருவதாகச் சொன்னார். 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வந்த வைரத்துக்கென  பிரத்யேகமான  இந்தியப் பங்குச்சந்தை நல்ல முறையில் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை ஒட்டி, கங்கையைத் தூய்மைப் படுத்தும் நடவடிக்கைகளுக்காக வைரங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு சபை 21 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.

Pin It