இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறும்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று லண்டன் லார்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் மணி 3.30க்குத் தொடங்குகிறது. நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டி, வரும் செவ்வாய்க் கிழமை லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்குத் தொடங்கும்.

Pin It