இந்தியா, உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரம் – உலக வங்கி.

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாறும் வழியில் முன்னேறி வருவதாக மத்திய வர்த்தகத் தொழில் துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபு கூறியிருக்கிறார். அடுத்த 16 ஆண்டுகளில் இந்தியா பத்து லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கான உலக வங்கி அறிவிப்பின்படி, இந்தியா உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக வந்துள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர் திரு சுரேஷ் பிரபு, இந்த நிலைமை பிரதமர் திரு நரேந்திர மோதி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அமைப்பு, பகுதி மற்றும் சமூகப் பொருளாதார சீர்திருத்தத்தின் விளைவு என்று கூறினார். உள்நாட்டு மொத்த உற்பத்தி அடிப்படையில் பிரான்ஸை பின்னுக்குத் தள்ளி இந்தியா ஆறாவது இடத்திற்கு முன்னேறியது. அமெரிக்கா முதலாவது இடத்திலும், சீனா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியன முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடங்களிலும் உள்ளன.

Pin It