இந்தியா, ஓமன் இராணுவக் கூட்டுப் பயிற்சி நிறைவு.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் 2017-ஆம் ஆண்டுக்கான கூட்டுப்பயிற்சியை இந்திய மற்றும் ஓமானியப் படைகள் நேற்று நிறைவு செய்தன. இருநாடுகளின் ராணுவ உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 14 நாட்களுக்கு நடந்த இந்த ராணுவ கூட்டுப் பயிற்சியில் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவது, பனிபடர்ந்த பகுதிகளிலும் அடர்ந்த காடுகளிலும்  பாதுகாப்பை உறுதி செய்வது, ஆகியன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் இரு நாட்டு ராணுவங்களும் ஈடுபட்டன. இந்திய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் நவீன் குமார் இந்தப் பயிற்சியின் நிறைவை அறிவித்தார். இந்தக் கூட்டுப் பயிற்சியின் மூலம் இரு நாடுகளின் ராணுவங்களும் நெருக்கமாக செயல்படுவது பற்றிய நல்லிணக்க உணர்வும் நம்பிக்கையும் மேம்பட்டதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் லெஃப். கர்னல் மணீஷ் மேத்தா தெரிவித்தார்.

Pin It