இந்தியா – பெரு இடையே சுங்கவரி தொடர்பான பரஸ்பர உதவி மற்று ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவும், பெருவும் சுங்கவரி தொடர்பாக பரஸ்பர உதவி மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனையடுத்து, இரு நாடுகளின் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இடையே தகவல் மற்றும் உளவு அடிப்படைத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் சட்ட அமைப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், சுங்க வரிகளைச் சிறப்பாக அமல்படுத்துவது, சுங்கம் தொடர்பான குற்றங்களைத் தவிர்ப்பது மற்றும் புலனாய்வு செய்வது ஆகியவற்றுக்கும் இந்த ஒப்பந்தம் உதவியாக அமையும்.

தில்லியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாகத் தெரிவிக்கும் மத்திய நிதியமைச்சகத்தின் செய்திக்  குறிப்பு இருதரப்புக்கும் இடையே வர்த்தகம் நடைபெறும் பொருட்கள் சார்பான அனுமதிகளை விரைவுபடுத்த உதவும் எனத் தெரிவித்துள்ளது.

Pin It