இந்திய, நேபாளி தூதரகங்கள் துணைத் தூதரக முகாம்களுக்கு ஏற்பாடு.

நேபாளத்தில், பைராவா, புத்வால் மற்றும் பரத்பூர் ஆகிய இடங்களில், இம்மாதம் 7ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை, இந்திய, நேபாளி தூதரகங்கள் துணைத் தூதரக முகாம்களுக்கு ஏற்பாடு செய்தன. இம்முகாம்களில், இந்நகரங்களிலும், அவற்றின் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் 600க்கும் மேற்பட்ட இந்தியக் குடிமக்களுக்கு பதிவுச் சேவைகள் அளிக்கப்பட்டன. மற்ற துணைத் தூதரக சேவைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

பைராவா வர்த்தக சபை, புத்வால் வர்த்தக சபை மற்றும் பரத்பூர் மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து இம்முகாம்களை நடத்த உதவின. உள்ளூரிலுள்ள இந்தியக் குடிமக்கள் கூட்டமைப்பும் தூதரகங்களுக்கு இம்முகாம்களை நடத்த உதவியது. இதுபோன்ற முகாம், இம்மாதம் 16, 17 தேதிகளில் பொகாராவில் நடத்தப்படும்.

Pin It