இந்திய, நேபாள வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.

இந்திய, வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி அவர்களை நேற்று புது தில்லியில் சந்தித்தார்.  வேளாண்மை, ரயில்வே, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆகியவை உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். இரு தலைவர்களும், கடந்த சில மாதங்களாக, இருநாடுகளுக்குமிடையே அனைத்து நிலைகளிலும் இருதரப்புப் பரிவர்த்தனைகள் முடுக்கிவிடப் பட்டதன் விளைவாக, பல துறைகளில் கணிசமான அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்துத் தங்கள் திருப்தியை வெளியிட்டனர். இருநாடுகளுக்குமிடையிலான நல்லுறவில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய உத்வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ள இருதலைவர்களும் மீண்டும் உறுதிபூண்டனர்.

Pin It