இந்திய – பூட்டான் இரு தரப்பு தூதரக உறவுகளின் பொன் விழா – சிறப்புச் சின்னம் வெளியீடு.

பூட்டானுடன் கூட்டுறவு ஒத்துழைப்புக்கான வலுவான அடித்தளம் அமைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். இரு நாட்டுத் தூதரக உறவுகளின் பொன்விழாவைக் குறிக்கும் வகையில் தில்லியில், சின்னம் ஒன்றை நேற்று இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தனர். இருதரப்பு உறவுகளின் முழு ஆற்றலையும் வெளிக்கொண்டுவர அனைவரும் உழைக்கவேண்டும் என்றும் இதன் மூலம் இரு நாடுகளும் பலனடையமுடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மதிப்பீடுகள் மற்றும் முன்னுரிமைகளின் பகிர்தல், அதிகபட்ச நம்பிக்கை மற்றும் புரிதல், பரஸ்பரம் மரியாதை மற்றும் உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கிடையில் மிகச் சிறந்த நட்பும் கூட்டுறவும் நிலவுவதாக திருமதி சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தினார்.

Pin It