இந்திய ராணுவத்திற்கு ஏ எச் – 64 இ ரக அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்.

இந்திய ராணுவத்திற்கு ஏ எச் – 64 இ ரக அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்களை 93 கோடி டாலருக்கு விற்பதற்கான ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று இரவு இதனை தெரிவித்தது. இந்த ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு இல்லாத நிலையில் ஒப்பந்தம் செயல்படுத்தப்படும்.

போயிங் நிறுவனமும், இந்தியாவின் டாடா நிறுவனமும் இந்திய தொழிற்சாலையில் அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கான  பாகங்களை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளன. எனினும், அமெரிக்கா அளித்துள்ள இந்த ஒப்புதல் அமெரிக்க உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடி விற்பனை தொடர்பானது. இந்த வகையில், அமெரிக்காவின் லாக்ஹீட் மாரட்டின்,  ஜெனரல் எலக்ட்ரிக், ரேத்தியான் ஆகிய பெரிய ஆயுத நிறுவனங்கள் முன்னணி ஒப்பந்தக்காரர்களாக உள்ளனர்.

விமானங்கள் தவிர, இரவு நேரத்தில் பார்க்கக்கூடிய உணர் கருவிகள், ஜிபிஎஸ் வழிகாட்டும் கருவிகள், நு}ற்றுக்கணக்கான கவச எதிர்ப்பு ஹெல்ஃபயர் கருவிகள், ஸ்டிங்கர் ஏவுகணைகள் ஆகியனவும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். ஏ எச் – 64 இ அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் பாதுகாப்புத் திறனை உயர்த்தும் என, அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

 

Pin It