இந்து திருமண மசோதா, பாகிஸ்தானில் சட்டமாகியது.

பாகிஸ்தானில், இந்து திருமண மசோதாவை, அதிபர் மம்னூன் ஹுசேன் நேற்று சட்டமாக்கினார்.  இச்சட்டத்தின் மூலம், இந்து திருமணங்கள் மற்றும் குடும்ப உரிமைகள் பாதுகாக்கப்படும்.  பிரதமரின் ஆலோசனையின் பேரில் அதிபர் இம்மசோதாவில் கையெழுத்திட்டார்.  மேலும், 18 வயதுக்குட்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்ள இச்சட்டம் தடை விதிக்கிறது.  இந்து சமூகத்தின் கலாச்சாரச் சடங்குகள் இச்சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறது.  நீதியியல் மூலமான பிரிவு என்கிற விஷயமும் இச்சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்துப் பெண்கள் தங்களது திருமணத்திற்கான சான்று ஆவணங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

Pin It