இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கத்திற்குப் பிறகு அதிர்வலைகள் – தப்பித்தவர்கள் பீதி.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்குப் பிறகு, வலுவான அதிர்வலையொன்று லோம்பாக் பகுதியை நேற்று தாக்கியது. ஏற்கனவே 164 பேரைப் பலிவாங்கி, 1400 பேரைக் காயப்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு, மீண்டும் வரும் அதிர்வலைகளால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்க புவி ஆராய்ச்சி நிறுவனம், 5.9 ரிக்டர் அளவில் இந்தோனேஷியாவின் வடமேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ பூர்வோ நுக்ரோஹோ அவர்கள், ஞயிறுவரை 355 தொடர் அதிர்வலைகள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Pin It