இந்தோ பஸிஃபிக் பகுதி மேம்பாட்டிற்கு இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த தனியார் துறையினருக்கு முக்கிய பங்கு.

இந்தோ பஸிஃபிக் பகுதியில் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனியார் துறையினருக்கு முக்கியப் பங்களிக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளன. தெற்காசியாவின் துணைச் செயலர் திரு தாமஸ் வஜ்தா, தொடர்புகளை மேம்படுத்தி, வளத்தை ஊக்குவிப்பதில் தனியார் துறையினர் முக்கியப் பங்காற்றியதாகக் குறிப்பிட்டார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளை ஒருங்கிணைத்து, கட்டமைப்புக்கென முத்தரப்பு அமைப்பை அமெரிக்க வணிக அமைப்பு உருவாக்க அண்மையில் மேற்கொண்ட முன்னெடுப்பை அவர் வரவேற்றுள்ளார். அமெரிக்க, இந்திய வணிக அமைப்பு மற்றும் அமெரிக்க, ஜப்பான் வணிக அமைப்பு இணைந்து, கடந்த வாரம் இந்த முத்தரப்பு அமைப்பைத் துவக்கின.

Pin It