இன்று உலக வானொலி தினம்

உலக வானொலி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நாளையொட்டிப் பிரதமர் திரு  நரேந்திர மோதி விடுத்துள்ள செய்தியில் வானொலியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் நேயர்களுக்கு டுவிட்டரில்  வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கும் கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்வதற்கும் பொழுதுபோக்கிற்கும் ஒன்றுபட்ட வளர்ச்சிக்கும் வானொலி வலிமை மிக்கதொரு ஊடகமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தாம் பங்கேற்ற மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அருகில் இருந்து அவர்களின் அனுபவங்களைப் பெற முடிந்ததாகப் பிரதமர் கூறியுள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் உலகவானொலி தின நாளையொட்டி விடுத்துள்ள செய்தியில் வானொலி வலிமை மிக்கதொரு ஊடகம் என்றும் மக்களின் உணர்வுகளைப் பல்வேறு தருணங்களில் அணுகி அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வானொலியில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் கேட்ட பிரதமரின் குரலும் இனிமையான பாடல்களும் தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் 36 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வானொலி தினத்தைக் கொன்டாடுவது என்று முடிவு எடுக்கப்பட்டதையடுத்து இந்நாள் கொன்டாடப்படுகிறது.

Pin It