இன்று, பாங்காக்கில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன. பாங்காக்கில் நடைபெற்று வரும்  இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியாவின் சார்பில் ஆடவர் பிரிவில் ஷிவ் தாபா, தீபக் சிங், அமித் பங்கல், கவீந்தர் சிங் பிஸ்த், ஆஷிஷ், ஆஷிஷ் குமார், சதீஷ் குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மகளிர் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் நிக்கத் ஜரீன், மனிஷா, சோனியா செய்கல், சிம்ரன்ஜித் கவுர், பூஜா ராணி அகியோர் கலந்து கொள்கின்றனர். அரையிறுதி இறுதியில் பங்கேற்பதன் மூலம் இவர்கள் பதக்கங்கள் வெல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Pin It