இயற்கை உரத்தை முழுமையாக பயன்படுத்தும்  சிக்கிம் மாநிலத்திற்கு ஐ.நா விருது.

 ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் எதிர்கால கொள்கைக்கான தங்கப்பரிசு,  இந்த ஆண்டு, சிக்கிம் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது.  உலகின் முதலாவது முழுமையாக இயற்கை உரத்தை பயன்படுத்தும் மாநிலமாக உருவாகி சாதனை படைத்திருப்பதற்காக, இந்த விருது வழங்கப்படுகிறது. சிக்கிம் மாநிலத்தின், வேளாண் சூழலியல் மற்றும் நீடித்த உணவு முறைகள் தொடர்புடைய கொள்கைகள், இந்த அமைப்பினால் பரிசீலிக்கப்பட்டது. 25 நாடுகளிலிருந்து 51 கொள்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ப்ரேசில், டென்மார்க் மற்றும் எக்வடார் ஆகிய நாடுகள் வெள்ளிப்பதக்கங்களை வென்றன.

சிக்கிம் மாநிலத்தின் கொள்கைகளால், 66 ஆயிரத்திற்கும் அதிக விவசாயிகள் பலனடைந்தனர் என்றும் சுற்றுலா ஊக்கம் பெற்றதால், இதர நாடுகளுக்கும் இது உதாரணமாக திகழ்வதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

சிக்கிம் மாநில முதலமைச்சர் திரு பவன் சாம்லிங், நாளை இந்த விருதை ரோமில் பெற்றுக்கொள்ளவார்.

 

Pin It