இலங்கைத் தாக்குதலில் 9 தற்கொலைப்படையினர் ஈடுபட்டனர் – இலங்கை அரசு.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் தற்கொலைப்படையைச் சேர்ந்த 9 பேர் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. செய்தியாளர்களிடம்  நேற்று இதைத் தெரிவித்த அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ருவான் விஜயவர்த்தனே, இவர்களில் எட்டுபேரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்ததாகவும் அவர் கூறினார். இலங்கையில் செயல்பட்டு வரும் தேசிய தவுஹித் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த ஒரு நபர், தற்கொலைப்படையிலிருந்து கொண்டு மற்றவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, இந்த்த் துயர சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 39 பேர் வெளிநாட்டவராவர்.   இலங்கையில் 60 பேர் சந்தேகத்தின்பேரில் அழைத்துச்  செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், 32 பேர் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எமது  கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கிறார். இதனிடையே, பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை காவல்துறையினர் செயலிழக்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Pin It