இலங்கையின் வளர்ச்சியில் இந்தியா எப்போதும் அக்கறை கொண்டுள்ளது – பிரதமர் திரு நரேந்திர மோதி.

இலங்கை மத்திய மாகாணத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோதி காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றினார். இலங்கையின் வளர்ச்சியில் இந்தியா எப்போதும் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர், இலங்கைக்குத் தேவையான உதவிகளை இந்தியா வழங்கும் என்று தெரிவித்தார். 400 க்கும் மேற்பட்ட வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக அந்நாட்டுப் பிரதமர் திரு. ரணில் விக்கிரமசிங்கே பங்கேற்றார்.

பின்னர் பேசிய அவர், தமது நாட்டிற்கு இந்தியா வழங்கி வரும் பல்வேறு உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். கொழும்பு வாரணாசி இடையே நேரடி விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட வேண்டும் என்ற திரு. நரேந்திர மோதியின் விருப்பத்தைத் தாம் வரவேற்பதாக அவர் கூறினார். இலங்கை முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இந்திய உதவியுடன் கடந்த மாதம் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டதை அவர் அப்போது நினைவு கூர்ந்தார். இலங்கையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்காக 300 கோடி டாலர்கள் அளவுக்கு நிதியுதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

 

Pin It