இலங்கையில்,  இந்தியாவின் உதவியுடன் ஆயிரத்து 200 வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

 

இலங்கையில்  இந்தியாவின் உதவியுடன் ஆயிரத்து 200 வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இலங்கை நாட்டின் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 கிராமங்களில் இந்த வீடுகள் கட்டப்பட உள்ளன. இலங்கைக்கான இந்தியத் தூதர் திரு தரன்ஜித் சிங் சாந்து, அந்நாட்டின் வீட்டு வசதித்துறை செயலாளர் திரு பெர்னார்ட் வசந்தா ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  இத்துடன் சேர்த்து இலங்கையில் 100 மாதிரி கிராமங்களில் இரண்டாயிரத்து 400 வீடுகள் இந்தியா உதவியுடன் கட்டப்பட உள்ளன.

Pin It