இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வகை செய்யும் மசோதா நாடளுமன்றத்தில் நிறைவேற்றம்.

இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்க வகை செய்யும் மசோதா நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பத்தாண்டுகளுக்கு மேல் நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கென தனிப்பட்ட அலுவலகம் ஒன்றை நிறுவ இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த உள்நாட்டுப் போரில் வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில், ஏராளமானோர் காணாமல் போனதாக, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்தார். இந்த மசோதாவுக்கு எதிராக, முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தது  குறிப்பிடத் தக்கது.

Pin It