இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, வெளியுறவுத்துறை இணையமைச்சர் திரு வி கே சிங், ஆழ்ந்த இரங்கல்.

புதுதில்லியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு நேரில் சென்ற வெளியுறவுத்துறை இணையமைச்சர் திரு வி கே சிங்,  அந்நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்  கொண்டார். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தூதரக அதிகாரிகளிடம் அமைச்சர் தெரிவித்ததாக, வெளியறவுத்துறை செய்தித் தொடர்பாளர் திரு ரவீஷ்குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Pin It