இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ஹேமாஸ்சிறி பெர்ணான்டோ நேற்று ராஜினாமா.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ஹேமாஸ்சிறி பெர்ணான்டோ நேற்று ராஜினாமா செய்தார். தமது பணிகளில் குறைபாடு ஏதும் இல்லை என்றாலும், பாதுகாப்புத் துறையில் உள்ள அமைப்புகளின் குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்றுத் தாம் ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 என்று தவறுதலாக கணக்கிடப்பட்டு  விட்டதாகவும், 253 பேர்தான் உயிரிழந்திருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இலங்கையில் தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றிரவு முழுவதும் அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.

 

Pin It