ஈராக்கில் காணாமல் போன 39 இந்தியர்கள் பாதுஷ் சிறையில் இருக்கலாம் – திருமதி சுஷ்மா ஸ்வராஜ்  

 

 

2014 ஆம் ஆண்டில் ஈராக்கில் காணாமல் போன 39 இந்தியர்களின் குடும்பங்களை நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ், இணையமைச்சர்கள் திரு எம் ஜே அக்பர் மற்றும் திரு வி. கே. சிங் ஆகியோர் சந்தித்துப் பேசினர். திரு வி. கே. சிங் அவர்கள் ஈராக் சென்று வந்ததில், அந்த 39 பேரும் ஈராக்கில் தொடர்ந்து சண்டை நடந்து வரும் பகுதியில், பாதுஷ் சிறையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது என்று திருமதி சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். மொசூல் நகரம் மீட்கப்பட்டதாக ஈராக் பிரதமர் அறிவித்த அன்றே, திரு சிங் அவர்களை ஈராக்கிற்குத் தாம் புறப்படச் சொன்னதாகவும் அவர் கூறினார். முன்னதாக, 2014 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், ஐ எஸ் தீவிரவாதிகளால் இவர்கள் கடத்தப்பட்டதாக  நம்பப்படுகிறது.

 

Pin It