ஈரான்: ஃபிரான்ஸ் நாட்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான டோட்டல் மேற்கொண்டிருந்த பல கோடி டாலர் மதிப்பிலான வாயு திட்டத்தை அந்த நிறுவனம் கைவிட்டுள்ளது. 

ஈரானில் ஃபிரான்ஸ் நாட்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான டோட்டல் மேற்கொண்டிருந்த பல கோடி டாலர் மதிப்பிலான வாயு திட்டத்தை அந்த நிறுவனம் கைவிட்டுள்ளது.  அமெரிக்கா மீண்டும் விதித்துள்ள தடைகள் காரணமாக இந்த நடவடிக்கையை அது எடுத்துள்ளது.  ஈரானிய எண்ணெய்த்துறை அமைச்சர் திரு பிஜான் நம்தர் ஜாங்கனே நேற்று தெக்ரானில் இதைத் தெரிவித்தார்.  இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே ஃபிரான்ஸ் நிறுவனம் இந்த முடிவை அறிவித்துவிட்டதாக அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் செய்தி நிறுவனம் ஐகானாவிடம் தெரிவித்தார்.

Pin It