ஈரான் மீதான அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளின் பாதிப்பினைத் தடுக்க ஐரோப்பிய யூனியன்  நடவடிக்கை.

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதையடுத்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக ஐரோப்பிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என்று ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது. ஐரோப்பிய ஆணையத் தலைவர் திரு. ஜீன் க்லாட் ஜங்கர் இது குறித்துக் கூறுகையில், இதுதொடர்பாக பல்கேரியாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தியதாகக் கூறினார். 2015 ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப்  கடந்த வாரம் அறிவித்தார்.

Pin It