ஈரான் மீது மேலும் தடைகள் இல்லை – அமெரிக்கா

ஈரான் மீது மேலும் தடைகளை விதிக்கவேண்டாம் என அமெரிக்கா முடிவு செய்துள்ளது.  2015ம் ஆண்டு அந்நாட்டுடன் செய்து கொள்ளப்பட்ட  அணு ஒப்பந்தத்தை மீறியதாகக்  கூறி அமெரிக்கா பல்வேறு தடைகளை ஈரான் மீது விதித்திருந்தது.  அண்மையில் ஈரானைச் சேர்ந்த 14 தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா  தடை விதித்திருந்த நிலையில் இனி இது போன்ற தடைகளை  விதிக்கவேண்டாம் என அந்நாட்டு அதிபர் டொனால்டு  டிரம்ப் முடிவு எடுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடவேண்டாம்  என ஈரானைக்  கேட்டுக்கொண்டுள்ளன.

Pin It